விளாத்திகுளத்தில் வாதிரியார் சமுதாய மக்கள் சார்பாக வெகு விமர்சையாக நடைபெற்ற மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா!
யார் இந்த ராஜராஜ சோழன்? 9,10 ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டை ஆண்ட ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருண்மொழிவர்மன்,சுந்தர சோழனின் இரண்டாவது மகன் ஆவார், இவர் கி பி 985 ஆம் ஆண்டு முதல் 1014 ம் ஆண்டு வரை சோழ நாட்டை ஆள்கிறார், அவ்வாறு ஆட்சி செய்யும் போது தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மண்டலங்களாக பிரித்து , அவற்றுக்கு ஏற்ப அதிகாரங்களை வழங்கி நிர்வாக முறையை ஒழுங்கு செய்தார், ராஜராஜ சோழனிடம் இருந்த கடற்படையை வைத்து இலங்கையை வென்றதோடு கடாரம், இந்தோனேசியா, லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை வென்று தமது ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்து வர்த்தகம் பெருக செய்தார். இவரிடம் கப்பல் படை,தரைப்படை பெருமளவில் இருந்ததால் , அதனால் இவர் "எம்மண்டலமும் கொண்டது ஒழிய" பெருமைக்குரியவராக இருந்தார், நான் முடி சோழன் என்றும் அறியப்பட்டார்.
சோழனாகிய இவர் எதிரிகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், சேரனையும், பாண்டியனையும், ஈழம் மஹிந்தனையும் தனது ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்த பெருமையும் இவருக்கு உண்டு.அதேபோல் இவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் நவம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் சதயத் திருவிழாவை முன்னிட்டு, இவரது வரலாற்றை கதைகளாகவும், நாடகங்களாகவும் பல்வேறு கலைஞர்களுடன் தத்ரூபமாக தற்போது வரை சொல்லப்படுகிறது.
தற்போது ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயில் இன்றைக்கு "யுனெஸ்கோ" அளவில் பாரம்பரிய குறியீடு சின்னங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பரதக் கலைஞர்களின் நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ராஜராஜ சோழனின் பெருவுடையார் கோவில் மற்றும், மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அலுவலர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆன்மீகவாதிகள் என பலர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழனின் திருவுருவப்படத்திற்கு வாதிரியார் சமுதாய மக்கள் சார்பாக, கற்பூரம் காட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் மகா சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணிய தேவர், பரமசிவதேவர், குணசேகரன், வாத்தியார் கள்ள மகா சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்புச் செயலாளர் தர்மதுரை, நிர்வாகிகள் சகாயராஜ், பாலமுருகன், மற்றும் வாதிரியார் ராஜகுல மகளிர் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.