விளாத்திகுளத்தில் தவெக கட்சி நிர்வாகி பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் தவெக நகரச்செயலாளர் தலைமறைவு!


பெண்கள் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தவெக நகரச்செயலாளர் மீது வழக்குப்பதிவு!


பெண்களுக்கான தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் தவெக நகர செயலாளர்கள்...


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர்நகர் பகுதியை  சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரின் மனைவி தனலட்சுமி (37), இவர் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை கட்சியில் பணியாற்றி வருகிறார்.


இந்தநிலையில், கடந்த 02-10-2026 வெள்ளிக்கிழமை இரவு முத்துராமலிங்கசேதுபதி செல்போனில் தனலட்சுமி தொடர்பு கொண்டு விளாத்திகுளம் நகர செயலாளர் நான் இருக்கிறேன் என்னை மதிக்காமல் நீ எப்படி மாவட்ட செயலாளரை பார்க்க போச்சு?, விளாத்திகுளத்தில் நகரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் நீ என்னிடம் தான் கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இதுவும் போதாது என்று முத்துராமலிங்கசேதுபதியும் அவரது மனைவியும் தனலட்சுமி வீட்டுக்கே சென்று, தனலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி,செருப்பை எடுத்து தனலட்சுமி முகத்தின் மீது எரிந்தும் வாசலில் கிடந்த விளக்கமாறை எடுத்து முத்துராமலிங்க சேதுபதியின் மனைவி சௌந்தர்யா,தனலட்சுமி மீது வீசி,தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து தனலட்சுமியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர், நடைபெற்ற கலவரத்தை விளக்கி விட்டனர், பொது  இடத்தில் தன்னை அடித்து அசிங்கப்படுத்தி ஆபாசமாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்திய முத்துராமலிங்கசேதுபதி மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்துள்ளார்.


புகார் மனுவை பெற்றுக்கொண்ட விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் புகார் மனு மீது 03-10-2026 சனிக்கிழமை இரவு வரை எந்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தனலட்சுமி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது, பின்னர் சனிக்கிழமை இரவு விளாத்திகுளம் தமிழக வெற்றிக் கழக நகரசெயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மீது  பெண்கள் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க சேதுபதியை தேடி வருகின்றனர்.



கடந்த வாரம் எட்டையாபுரம் நகர செயலாளர் கனகராஜ் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் அருவாளுடன் ஒரு இளம் பெண் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அடங்குவதற்குள் விளாத்திகுளம் நகர செயலாளர் தனது கட்சி நிர்வாகி பெண்ணின் வீட்டிற்க்கே சென்று பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.