விளாத்திகுளம் அருகே தந்தை பெரியாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகலாபுரம் - சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொன்காசிராம், செண்பகக்கனி உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.