உங்களின் தேவைகள் என்னவென்று கூறுங்கள் மீண்டும் கழக ஆட்சி வந்தவுடன் நிவர்த்தி செய்கிறேன் விளாத்திகுளம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான மார்கண்டயேன் எட்டயபுரம் பகுதிகளான கீழரதவீதி, விளாத்திகுளம் முக்கு கீழவாசல்சந்திப்பு, சிவன்கோவில் தெரு, கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக்கட்சியினருடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு எட்டயபுரம் பகுதி மக்களுக்கு இதுவரை செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய வேட்பாளர் மார்கண்டயேன் எட்டயபுரம் பகுதி மக்களின் தேவைகள் என்னவோ அதை கழக ஆட்சி வந்த உடன் கண்டிப்பாக நிவர்த்தி செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.