தூத்துக்குடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பணிக்கநாடார் குடியிருப்பு கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்தப்பள்ளியில் கடந்த 6 மாத காலமாக தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராமன் (42) என்பவர், அப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்,இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் ராமனை போகோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.