தமிழக வெற்றி கழகம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாள் விழா!
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி வட,கிழக்கு மாவட்டம் புதூர் மேற்கு ஒன்றியம் சார்பாகவும்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் S.S செண்பககனி தலைமையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் A.K. மகேஸ்வரன்,மாவட்ட இணைச்செயலாளர் காசிராம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ பாலகிருஷ்ணன்,புதூர் மேற்கு ஒன்றிய இணை செயலாளர் S. கபாலீஸ்வரன், நாகலாபுரம் நகர செயலாளர் பாக்யராஜ்,புதூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெ.சரவணக்குமார், மற்றும் அக்ரி பாலமுருகன், விஜயகுமார், S. செண்பகராஜ், தங்கமாரியப்பன், மற்றும் கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.