இடுப்பில் இருந்த வெள்ளி அர்னாக்கொடி, காதில் இருந்த கடுக்கண்களை அகற்றிவிட்டு  நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட  மாணவர்கள் - தங்கள் குழந்தைகளுக்காக கடும் வெயிலில் காத்திருந்த பெற்றோர்கள்!



எட்டயபுரத்தில் 13 பேர் தேர்வு எழுத வரவில்லை!




2026-27 கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணிக்குதொடங்கியது; இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) ஆகிய 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.




எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்னர் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவர் வெள்ளி அர்னாக்கொடி அணிந்திருந்தார். அதனை அகற்றி அவர்களது பெற்றோரிடம் கொடுத்த பின்னர் அந்த மாணவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் அதேபோன்று. மற்றொரு மாணவர் காதில் போட்டு இருந்த கடுக்கனை அகற்றும்படி கூறியதால், அவர் அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.


எட்டயபுரம் மையத்திலும் 480 பேர் தேர்வு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 467 மாணவ மாணவிகள் தேர்வு எழுத சென்றனர்,13 பேர் தேர்வு எழுத வரவில்லை.


எட்டயபுரம் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக  வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளுக்காக காத்திருக்கின்றனர்.