புதூரில் புரட்டாசி மாதம் 3-வது சனியை முன்னிட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அருள் பாலித்து வரும்  ஸ்ரீதேவி,பூதேவி  கோதா ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை கருட வாகனத்தில் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.


முன்னதாக காலை 5 மணி அளவில் கோபூஜை,விஸ்வரூபம் திருப்பள்ளியெழுச்சி,அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் ஹோம பூஜை, காலை 9 மணி அளவில்  திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து,கருட வாகனத்தில் மேளதாளங்கள், தேவராட்டத்துடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


வீதி உலா வந்த ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள்  தேங்காய்பழம் உடைத்து வழிபட்டனர்.