தமிழ்மாத பிறப்பை முன்னிட்டு விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு!

ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம், அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஐயப்பன் சன்னதியில் உள்ள ஐயப்பனுக்கு தமிழ்மாத பிறப்பை முன்னிட்டு,பால், நெய்,தயிர்,சந்தனம், தேன்,பஞ்சாமிர்தம், மஞ்சள் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு பஞ்சமுக தீபாதாரணை   நடைபெற்றது.இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.