எட்டயபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் உரிமம் சான்று பெற FOSTAC பயிற்சிக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் 


தூத்துக்குடி மாவட்டம்   விளாத்திகுளம் அருகே உள்ள  எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில்,தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் ஆலோசனையின்படி உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் உரிமம் சான்று பெற ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 

கூட்டத்தில் FOSTAC பயிற்சியை தொடர்ந்து முகாமில் உணவு பாதுகாப்பு உரிமம் வாங்காதவர்களுக்கு புதியதாகவும்,பழைய உரிம பதிவு சான்றிதழ் உள்ளவர்களுக்கு புதுப்பித்தல் மற்றும் உரிமம் சம்பந்தமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


கூட்டத்திற்கு கோவில்பட்டி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்  செல்லப்பாண்டி தலைமை தாங்கினார்,எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்க தலைவர் ராஜா, துணை தலைவர் வெங்கடேஷ் ராஜா, உணவு பாதுகாப்பு அதிகாரி முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் வர்த்தக சங்க செயலாளர் அய்யனார்,நிர்வாகிகள் கோமதி சங்கர்,குமாஸ்தா அய்யனார் மற்றும் வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.