விளாத்திகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கடலையூரில் சிந்தலக்கரை,ஆர்.வெங்கடேஸ்வரபுரம், சின்னமலைக்குன்று, கடலையூர்,உருளைக்குடி,மீனாட்சிபுரம்,அய்யாக்கோட்டையூர், வரதம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மின்வாரிய துறையில் பெயர் மாற்றம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் உள்ளிட்ட ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர் சுபா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ராமராஜன், உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.