விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்கள் அணிவித்து காலபைரவருக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை, காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.