வெட்டாதே! வெட்டாதே! மரத்தினை வெட்டாதே: நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம்!


எட்டையாபுரம்  பகுதியில் மரங்களை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை!

 

 மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!



மரங்கள் இயற்கையின் வரப்பிரசாதம். அவை மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு,உடை, இருப்பிடம் ஆகியவற்றைத் தருவதோடு, சுவாசிக்கத் தூய ஆக்ஸிஜனையும் அளிக்கின்றன. பூமியின் வெப்பத்தைக் குறைத்து, மேகங்களை ஈர்த்து மழை பொழியச் செய்வதிலும் மரங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக மரங்களை நட்டுப் பாதுகாத்து வருகிறோம், மரங்கள் வளர்ப்பது அவசியம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல் நடிகர் விவேக் வரை, மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.




அதேபோல் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், கடந்த 5 ஆண்டுகளாக மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், மரங்களால் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று கிராமம் முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும், வனத்துக்குள் விளாத்திகுளம் என்று சூளுரைத்து கடந்த 5 ஆண்டுகளாக விளாத்திகுளம் தொகுதியில் உள்ள  சாலையின் இரு பக்கமும் மரங்களை நட்டு பேணிக்காத்து வருகிறார்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் 

 வடக்கு ரத வீதியில், உள்ள பழமை வாய்ந்த வேப்பமரம் இப்பகுதியில்

பொதுமக்களுக்கு, நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது மேலும் அதிக பாரம் உள்ள கிளைகளை அகற்றி நிழல் தரும் வேப்ப மரத்தை பாதுகாக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள், இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.