விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி நடைபெற்றது, இந்த திருவிழாவில் இயற்கை தானிய வகைகள் செய்யப்பட்ட லட்டு, புட்டு, பச்சரிசி முறுக்கு, கேழ்வரகு அல்வா, நவதானிய புட்டு,கருப்பட்டி பணியாரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன,இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.இந்நிகழ்வில் கிராம ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியா, வட்டார மேலாளர் பேச்சியம்மாள், ஒருங்கிணைப்பாளர் கனிராஜ், உதவியாளர் முத்து நாச்சியார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.