விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் போட்டியிட சிவகாம சுந்தரி விருப்ப மனு...!


வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு அக்கட்சியினரிடையே சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் 213-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் அவர்களின் மனைவி சிவகாமசுந்தரி மகேஷ் போட்டியிடுவதற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் மான கடம்பூர் ராஜூ-விடம் தனது விருப்ப மனுவை வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் உள்ளிட்ட கட்சியினர் பலர் இருந்தனர்.