சாயல்குடி அருள்மிகு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆலய 12 - ம் ஆண்டு மண்டல பூஜை விழா:பொன்னாபரண பெட்டியுடன் ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல்!   


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆலய 12 ம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி துளசி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல காலம் நோன்பு விரதம் நிறைவு காலத்தை முன்னிட்டு, சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து துளசி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாயல்குடி கமுதி - மதுரை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பொன்னாபரண பெட்டியுடன் தங்களது உடல்களில் அழகிய வண்ணம் கலர் மை பொடிகளை  பூசி நையாண்டி உரிமை மேளம் இசை வாத்தியங்களுக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனமாடி பேட்டை துள்ளி வைபவம்,சாயல்குடி  பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரை தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையின் வழியாக முக்கிய வீதிகளின் சாலைகளின் வழியாக உற்சாகமாக நடமாடி பேட்டை துள்ளி ஐயப்பன் ஆலயத்திற்கு சென்றனர்.  


நிறைவாக வண்ண மலர் பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்றது.