விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற "சரஸ்வதி பூஜை!"


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சரஸ்வதி பூஜை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபட்டுச் சென்றனர்.



விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பாக குழு அமைக்கப்பட்ட ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நவராத்திரி பண்டிகையின் 9-ம் நாள் விழா மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று கோவிலில் விஷேச பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதையொட்டி, கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சரஸ்வதி தேவியை கண்குளிர கண்டு பக்தி பாடல்கள் பாடியவாறு மனமுருகி தரிசனம் செய்தனர். மேலும், மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி தேவிக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.