விளாத்திகுளம் அருகே ரூ,7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் திறப்பு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிப்பிகுளம் கிராமத்தில்  தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை  மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்.

உடன் உதவி பொறியாளர் வள்ளி மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.