எட்டையபுரம் ஹோட்டலில் ரூ.2 லட்சம் பணம் திருட்டு.. 13வயது சிறுவன் கைது!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் கருப்பசாமி(43) என்பவர் எட்டையபுரம் - கோவில்பட்டி செல்லும் சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு மளிகைக் கடைக்கு கொடுப்பதற்காக ஹோட்டலில் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 875 பணத்தை கடையில் வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று அதிகாலையில் ஹோட்டலை அவரது மாமனார் திறந்து பார்த்தபோது ஹோட்டலில் உடைக்கப்பட்டு கருப்பசாமி வைத்திருந்த 2 லட்சம் பணம் திருடு போயிருந்ததைத்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மாமனார் கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்து வரச்செய்துள்ளார்.
பின்னர் பணம் திருடு போயிருப்பது தொடர்பாக எட்டையபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து, திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எட்டையாபுரம் கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது. இதை எடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.