விளாத்திகுளம் அருகே பொதுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச்சுவரை அகற்றக்கோரி சங்கரலிங்கபுரம் கிராம பொதுமக்கள் இரவில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கான பொதுப்பாதை ஆதிக்க சாதியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது,இந்தஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கான 60 அடி அகலமும் 360 அடி நீளமும் கொண்ட முழு பாதையை மீட்க கோரியும்,சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவர்களின் விளையாட்டு மைதானமாக சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா மைதானமாக,தூய சகாய அன்னை ஆலய திருவிழா மைதானமாக ஆதிதிராவிடர் விவசாயிகளின் களமாக ஆதிதிராவிட மக்கள் பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த பழைய சர்வே எண் 206/02 புதிய சர்வே எண் 347/04 என்பதில் சுமார் 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை ஆதிக்க சாதியைச் சார்ந்த தனிநபர் ஒருவர் போலியாக ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி பதிவு செய்த வழக்கில் போலி ஆவணங்கள் அடிப்படையில் தனிநபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேல்முறையீடு செய்திடக் கோரியும் 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பொது நூலகம் சமுதாய நலக்கூடம் கலையரங்கம் அமைத்துக் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும்,சுந்தரலிங்கபுரம் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் தொடர் போராட்டம்,சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆதி பகவன் புத்தர் திடலில் தினமும் மாலை 07 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆதி திராவிட மக்கள் திட்டமிட்டு,24/07/2024 புதன்கிழமை நேற்று முதல் நாள் போராட்டம் ஆதி திராவிடர் ஊர் பொதுமக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்டது.இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் தூத்துக்குடி அர்ஜுன்,ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை ஆற்றினர்.
நடைபெற்ற போராட்டத்தை ஆதி திராவிடர் ஊர் பொதுமக்களும் ஆதி பகவன் புத்தர் இளைஞர் மன்றத்தை சார்ந்த பொறுப்பாளர்களும் ஒருங்கிணைப்புச் செய்தனர்.