புதிய வழித்தட பேருந்து சேவையை நீட்டிக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஆற்றங்கரை, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், N.வேடபட்டி, அச்சங்குளம்,அயன் வடமலாபுரம், தாப்பாத்தி,சக்கிலிபட்டி,கீழ்நாட்டுகுறிச்சி,கைலாசபுரம் அயன்ராசாபட்டி வழியாக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து வழித்தடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப்பேருந்தானது தாப்பாத்தியில் இருந்து சக்கிலிப்பட்டி வரை சாலைபணிகள் நடைபெற்று வருவதால் இன்று மேலக்கரந்தை வழியாக இருக்கன்குடி சென்றது. இன்று விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணிக்கு பேருந்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் துவக்கி வைத்தார்.
இந்தப் புதிய வழித்தட பேருந்தின் வழக்கமான பேருந்து நேரம் காலை 6:30 மணிக்கு விளாத்திகுளத்தில் இருந்து புறப்பட்டு 8:00 மணிக்கு இருக்கன்குடி சென்றடையும். பின்பு 8:30 மணிக்கு இருக்கன்குடியில் இருந்து பேருந்தானது புறப்பட்டு 10 மணியளவில் விளாத்திகுளம் வந்தடையும், அதேபோல் மாலை 3:30 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து மாலை 5 மணிக்கு இருக்கன்குடி சென்றடையும், பின்பு 5:30 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து இரவு 7 மணி அளவில் விளாத்திகுளம் வந்தடையும் என்று விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்
தாப்பாத்தி சக்கிலிபட்டி, கீழ்நாட்டுகுறிச்சி, கைலாசபுரம்,அயன்ராசாப்பட்டி நென்மேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகப்படியாக சாத்தூர் செல்லும் நிலையிலேயே உள்ளனர். ஆனால் பேருந்தானது இருக்கன்குடி மட்டும் செல்வதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருக்கன்குடியில் இருந்து மாற்று பேருந்து ஏறி சாத்தூர் செல்லும் நிலை உள்ளது. எனவே புதிய வழித்தடத்தில் இயக்கக்கூடிய இந்த பேருந்தை விளாத்திகுளத்தில் இருந்து சாத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.