எட்டயபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில், எட்டயபுரம் வட்டத்தில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாக கணக்கு முடிப்பு வருவாய் தீர்வாய் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில்,14-05-2025 ஜமாபந்தி தொடங்கியது, தொடர்ந்து படர்ந்தபுளி குறுவட்டத்தைச் சேர்ந்த படந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைகாட்டுபுரம், சிங்கிலிபட்டி ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது இதில் மொத்தம் 58 மனுக்கள் பெறப்பட்டு 6மனுக்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு 5 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையும், 1 நபருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையும் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
இதில் எட்டயபுரம் வட்டாச்சியர் சுபா வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து நேற்று கழுகாசலபுரம், வேலிடுபட்டி, என்.புதுப்பட்டி மற்றும் முத்துலாபுரம் குறுவட்டத்தை சேர்ந்த அயன்கரிசல்குளம்,வி.கோடாங்கிபட்டி, வெம்பூர்,கீழக்கரந்தை ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது மொத்தம் 92 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு இலவச வீட்டு மனை பட்டாகளுக்கான ஆணையை வருவாய் தீர்வாய் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார் இதில் தாசில்தார் சுபா வருவாய் ஆய்வாளர், நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.