விளாத்திகுளம் அருகே புதுப்பிக்கப்பட்டும் 6 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு நடுத்தெருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வாட்டர் டேங்க் மற்றும் மின் மோட்டார் ஆகியவை செயல்படுத்தாமல் இருப்பதால், 6வது வார்டு பொதுமக்கள் மிகவும்  சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தகத் தொட்டியை மக்களின் பயன்பாட்டில் கொண்டு வர எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமானோர்  பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதில் இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சின்னத்துரை, கார்ட்டன் பிரபு  மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.