விளாத்திகுளம் அருகே திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு!



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் கிழக்கு ஒன்றியம் கே‌‌.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாபெரும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், கடந்த நான்காண்டுகளில் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும், இனிவரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினார். மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும், திட்டத்தின் பெயர் பற்றியும் கேள்விகள் கேட்டு சரியான பதில்கள் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தலைமை கழக இளம் பேச்சாளர் சக்திவேல்முருகன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இம்மானுவேல், புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், துரைச்சாமி வரும் முன்னாள் பஞ்சாயத் தலைவர் மஞ்சுளா உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.