தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவை கண்டித்து - விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் !  


தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - விளாத்திகுளம் மத்திய ஒன்றிய,பேரூர் கழக திமுக சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது.   கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கண்டன உரையாற்றினார். 


கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் A.C. ஜெயக்குமார்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புவிராஜ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி உள்ளிட்ட திமுக மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள்,கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.