மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து விளாத்திகுளத்தில் மறியல்!
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை,விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, விவசாய கடன் தள்ளுபடி,உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பஸ் நிலையம் முன்பு இருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் #DYFI மாவட்ட தலைவர் தினேஷ்குமார்,விவசாய சங்க தாலுகா தலைவர் இராமலிங்கம், #CPIM தாலுகா செயலாளர் ஜோதி ஆகியோர் மறியலை விளக்கி பேசினர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் மலைக்கனி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாலுகா தலைவர் கனகராஜ், செயலாளர் அய்யனார், அனைத்திந்திய விவசாய கிராமப்புற சங்கம் நிர்வாகி சண்முகபெருமாள், இந்திய தொழிற்சங்கம் சார்பில் ராமர், ஓய்வுபெற்ற மின் ஊழியர் சங்கம் சார்பில் சூசைராஜ், மருத்துவர் சங்கம் சார்பில் முருகன் உட்பட 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.