விளாத்திகுளம் அருகே வெம்பூர் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பல கட்டமாக போராட்ட நடத்தி வருகின்றன அதன் ஒரு பகுதியாக இன்று வெம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் இருந்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி தலைமையில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு 300 தபால்கள் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் வருகின்ற 21.3. 2025 அன்று வெம்பூரில் அனைத்து கட்சி சார்பாக மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற இந்த விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு வெம்பூர் கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.