எட்டையபுரம் அருகே  மின்சாரம் தாக்கி தனியார் ஊழியர் உயிரிழப்பு.


மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பாலமுருகன் (48), இவர் விளம்பர போர்டு வைக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள  மு.கோட்டூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் ஜவுளிக்கடை விளம்பர போர்டு வைக்கும் அணியில் ஈடுபட்டிருந்தபோது  போர்டில் இருந்த இரும்பு கம்பி  எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் பாலமுருகன் உடலை மீட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.