விளாத்திகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருப்போர் அறையில்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் 1989-ம் ஆண்டு கிராமத்தில் கிராமத்தின் உட்பகுதியில் பூதலபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதி கிராம மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக, ஆரம்பிக்கப்பட்டது பின்னர் 2000-ம் ஆண்டு 5 ஏக்கர் நிலப்பரப்பில்  ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பூதலாபுரம்  உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 



இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அதேபோல்  செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்போர் அறை இல்லாமல் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் அவல நிலை உள்ளது, அதேபோன்று இங்கு முறையான கழிவறை வசதி குடிநீர் வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.எனவே தமிழக அரசு கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோரிக்கையை ஏற்று பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  காத்திருப்போர் அறை மற்றும் 108 வாகன வசதி  செய்து தர வேண்டும் என்று பூதலாபுரம் சுற்றியுள்ள 30 கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.