அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!




ராமநாதபுரத்தில் இருந்து விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் வழியாக தூத்துக்குடி சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் எபினேசர் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் குளத்தூர் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டதாவது, குளத்தூர் to  ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் அரசு மதுபான கடைக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் சாலையைக் கடக்க முயலும்போது, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 5 மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர்,அரசு மதுபான கடைக்கு செல்லும் பொழுது சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாகவும், அதேபோல் குடியிருப்பு பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள அந்த அரசு மதுபான கடை இயக்கப்பட்டு வருவதால், பொது மக்களுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது பிரியர்கள் நடந்து கொள்வதால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும்...




குளத்தூர் பகுதியில் நீண்ட நாட்களாக இலவச வீட்டு மனை பட்டா இல்லாமலும் வீடு இல்லாமல் தவித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு ஒதுக்கக்கோரியும்.



குளத்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம்,சிப்பிகுளம்,கீழவைப் பார் சாலையை அகலப்படுத்த கோரியும்.



குளத்தூரில் இருந்து குறுக்குச்சாலை வரை மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க கோரியும்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் குளத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.