வைப்பாற்றில் மனித கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு:100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு! 



மனிதக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பொதுமக்கள் போராட்டம்!



விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கி வைப்பார் ஆனது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா வெம்பக்கோட்டை வழியாக,தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுகுறிச்சி முதல் தடுப்பணையில் ஆரம்பித்து முத்துலாபுரம்,கீழநம்பியாபுரம், ஆற்றங்கரை,விளாத்திகுளம்,மந்திகுளம்,வேடப்பட்டி வைப்பாற்றின் கடைசி தடுப்பணையான வைப்பார் தடுப்பணை வரை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து மன்னார் வளைகுடா கடலில் கலக்கின்றது.


இந்த வைப்பாற்றை நம்பி சுமார் 150-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கால்நடை வளர்ப்பு, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெல், எலுமிச்சை,தென்னை,சீனிஅவரை,சீனிகிழங்கு உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்.



இந்தநிலையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முத்துலாபுரம் வைப்பாற்று படுகையில் ரூ. 3,92,91,820/- மதிப்பீட்டில் 20 KLD கொள்ளளவு கொண்ட மனித கழிவுக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.



அவ்வாறு வைப்பாற்று படுகையில் மனிதக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரும் கழிவுகள், வைப்பாற்றில் கலந்து, நிலத்தடிநீர் மாசுபட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும்,அதேபோல் கால்நடைகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும், மக்காச்சோளம்,சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என முத்தலாபுரம்,கோட்டூர்,அயன்வடமலாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், நேற்று முத்தலாபுரத்தில் கிராம மக்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், அந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று மதுரை to  தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மு.கோட்டூர் விளக்கில் ஏராளமான பொதுமக்கள் முத்துலாபுரம் வைப்பாற்றப்படுகையில் மனித சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தையும் மீறி தமிழக அரசு முத்தலாபுரத்தில் மனிதக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் முத்தலாபுரம் தேசியநெடுஞ்சாலையில் மிகப்பெரிய சாலைமறியல் போராட்டம் நடக்கும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.


அதேபோல் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும்.


தூத்துக்குடி to  மதுரை தேசியநெடுஞ்சாலை மு.கோட்டூர் விளக்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.


முத்தலாபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற மாட்டுத்தாவணி இடத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வேண்டும்  


வீரப்பட்டி,மலைப்பட்டி சாலைப்பகுதிகளில் அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் சாலை சேதம் அடைவதால்,கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.


எட்டையாபுரம் தாலுகா பகுதிகளில் மக்களின் உயிரோடு விளையாடும் பட்டாசு ஆலைகளை திறக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.