விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடம் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் சாலையில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.