தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்த மாரிசெல்வம்(35), இவரது மனைவி சுப்புலட்சுமி (24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்திற்கு சென்று விட்டு கோவில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர், மேலக்கரந்தை கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் வன்னிய ராஜ் (33), என்பவர் மேலக்கரந்தையிலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் புதூர் சென்று கொண்டிருந்தார்,அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமம் அருகே மாரிச்செல்வம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இது வன்னியராஜ் ஒட்டி வந்த டாட்டா ஏஸ் வாகன மோதி விபத்துக்குள்ளானதில், மாரிச்செல்வம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார், சுப்புலட்சுமி காயமடைந்தார், மாரிசெல்வத்தின் உடலை மீட்ட மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வன்னியராஜ் என்பவரை பிடித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒருவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனங்கல் விற்பனை செய்த இருவர் கைது.
அடுத்த
நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026