விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால்தொத்தி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மேகவர்ண ராஜா(35) தனது இருசக்கர வாகனத்தில் வவ்வால்தொத்தி கிராமத்திலிருந்து எட்டையாபுரம் சென்று கொண்டிருந்தார், அப்போது சிந்தலக்கரை கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் குருசாமி ( 40)என்பவர் எட்டயபுரத்தில் இருந்து சிந்தலக்கரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, குருசாமி ஒட்டி வந்த வாகனமும் மேகவர்ணராஜா ஒட்டி வந்த இரு சக்கரவாகனமும் சிந்தலக்கரை அருகே எதிரெதிர் மோதி விபத்துக்குள்ளானதில், மேகவர்ண ராஜா படுகாயம் அடைந்தார், இதனை அடுத்து108 ஆம்புலன்ஸ் மூலம் மேகவர்ணராஜாவை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேகவர்ண ராஜா பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் படுகாயம் அடைந்த குருசாமி தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இந்த விபத்து குறித்து, எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.