கலைஞரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கிய MLA!


முன்னாள் முதல்வர் .கலைஞரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்   விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி வாழ்த்தினார். 


நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.