விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் .


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய தமிழகம் கட்சி சார்பாக குளத்தூர் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த வேட்பாளர் மாடசாமி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுவை பரிசீலனை செய்தனர். 

இந்தநிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் உமையணன்,குமரன்,ஜெயவீரன்,விஜயகுமார்,சிவசெல்வம், காமராஜ்  நிர்வாகிகள் பெத்துராஜ், முனியசாமி, ஜேம்ஸ்,பெருமாள், காளிதாஸ் உட்பட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.