கட்டிட
தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி.தமிழக
அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம். தமிழ்நாடு ஏ.
ஐ.டி.யு. சி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும்
ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள எட்டயபுரம் தபால்
அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை
தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்
தமிழக அரசு அறிவித்துள்ள 1200 ரூபாய் ஓய்வூதிய
திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி 2000 ரூபாய் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு 5000ரூபாய் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள்
எழுப்பப்பட்டது.
Vilathikulam
கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் இல்லை? தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கஞ்சா போதையில் ரகளை செய்து 7 வாகன கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது.
அடுத்த
உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026