விளாத்திகுளம் அருகே ரூ.34- லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெளவால்தொத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34- லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும், ரூ.24-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். .உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த்,வெங்கடாசலம்,பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.