விளாத்திகுளம் அருகே ரூ.43-லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார மையம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி ஊராட்சியில் (15-th Health Grand) திட்டத்தின் கீழ் ரூ.43-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்
.உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பெப்பின் காகு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன்,ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன்,வேம்பார் தெற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்தாய் ராமசுப்பிரமணியன்,சேவியர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.