விளாத்திகுளத்தில் ரூ.1-கோடி 21-லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர்பிளாக்சாலை !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட, 9-வது,13-வது,14-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் மாநில நிதி பகிர்மான குழு,15-வது நிதிக்குழு மற்றும் பொது நிதியிலிருந்து ரூ.1-கோடி 21-லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.