விளாத்திகுளம் அருகே ரூ.29.40-லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு சங்க வணிக வளாகம் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் A435 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கம் லிட்  பன்முக சேவை கூட்டுறவு சங்கங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.29.40-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.  நிகழ்வில் துணைப் பதிவாளர் கோவில்பட்டி ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.