விளாத்திகுளம் அருகே ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் திறப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழுதலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன், உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.