விளாத்திகுளம் - சிதம்பரநகரில் ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி,12-வது வார்டு சிதம்பரநகரில் வாதிரியார் சமுதாயம் சார்பில் ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார். நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.