விளாத்திகுளம் அருகே  கர்மவீரர் காமராஜர் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் மாலை அணிவித்து மரியாதை! 



தமிழகம் முழுவதும் இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் அமைந்துள்ள காமராஜரின் முழுவுருவச் சிலைக்கு விளாத்திகுளம்  அதிமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  குட்லக் செல்வராஜ் முன்னிலையிலும்  கட்சியினர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சின்னப்பன் மற்றும் கழக நிர்வாகிகள்  பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி காமராஜர் பிறந்தநாளை வெகு சிறப்பாக  கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் போடுசாமி, தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்