விளாத்திகுளம்  அருகே கவியரசர் அண்ணாமலை ரெட்டியாரின் நினைவு தினம்!


கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள கமலாபுரத்தில் அமைந்துள்ள கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.