விளாத்திகுளம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து மோதி 10 ஆடுகள் உயிரிழப்பு : ஆட்டின் உரிமையாளர் மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராம் என்பவரின் மகன் கார்மேகம் (55), இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் விளாத்திகுளம் - எட்டையாபுரம் சாலை பகுதி காடுகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கழுகாசலாபுரம் விளக்கு சாலையை கடக்க முயன்ற போது கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து, கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஆட்டு மந்தைகளின் மீதும், ஆட்டின் உரிமையாளர் கார்மேகம் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 10 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது, இதில் கார்மேகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன, இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த கார்மேகத்தை உடனடியாக காவல்துறையினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் பேருந்து ஓட்டுனரான தென்காசி மாவட்டம் திருவேங்கடம் - சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஆனந்தராஜிடம் (38) நடத்திய விசாரணையில் அதிகாலையில் ஆடுகள் மிரண்டு ஓடி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக் கொள்ளானது என்றும் ஓட்டுனர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.