எட்டையாபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பன் நாயக்கர் மகன் சின்னசங்குசாமி (60), இவர் தனது இருசக்கர வாகனத்தில் எட்டையாபுரம் - விளாத்திகுளம் சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயலோடு ஏற்றி தூத்துக்குடி சென்ற லாரி எதிர்பாராத விதமாக சங்கு சாமி ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சின்னசங்குசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து சங்குசாமியின் உடலை கைப்பற்றிய எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான எடப்பாடி வெள்ளாண்டி வலசுபுது பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சக்திவேலிடம் எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.