விளாத்திகுளம் அருகே  நாகலாபுரம் அரசு கல்லூரி ஹாக்கி வீரர்கள் அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கிப்போட்டிக்கு தேர்வு! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  நாகலாபுரம்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் மூன்றாவது இடம் பெற்று அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்றது பிப்ரவரி 22 முதல் 28 வரை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெறவுள்ள அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான ஹாக்கி போட்டிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி கலந்து கொண்டு விளையாட இருக்கின்றது அந்த அணியில் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இளங்கலை தமிழ் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் அரவிந்த்,முருகேஷ் மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவன் மதுபாலன் ஆகியோர் தேர்வு பெற்று விளையாட உள்ளனர்.அகில இந்திய ஹாக்கி போட்டிக்கு கலந்து கொள்ள செல்லும் வீரர்களை கல்லூரி முதல்வர் முனைவர் HB.ராமலிங்கம் தலைமையில் சிறப்பாக விளையாட வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர், இதில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஆல்டிரின் அதிசயராஜ் மற்றும் தமிழ் துறை தலைவர் முனைவர் முனியசாமி ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் வினோத் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு அகில இந்திய போட்டியில் வெற்றி பெற வாழ்த்து கூறி வீரர்களை வழி அனுப்பி வைத்தனர்.