எட்டையாபுரம் அருகே தேர்தலை புறக்கணித்த 900 மேற்பட்ட வாக்காளர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் அருகே உள்ள குளத்துவாய்பட்டி கிராமத்தில்,கிராம மக்களுக்கும் இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்கும் பல ஆண்டுகளாக பாதை பிரச்சினை நீடித்து வந்தது,இது சம்பந்தமாக கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரத போராட்டம், வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாறி மாறி இருதரப்பினரும் கல்லை தூக்கி எரிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்துறையின் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது, இதனை அடுத்து கிராம மக்கள் பாதை பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக கூறி வந்தனர்.
தற்போது பாதை பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில், இன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 64 குளத்துவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கியது,ஆனால் கிராமத்தில் 900-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் வெறும் 5 பேர் மட்டுமே தற்போது வரை வாக்கு செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.