திமுக அரசை கண்டித்து விளாத்திகுளத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!
கடந்த 2022-ம் ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென சொத்துவரி 6%உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக காரணமாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் ,திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுகவினர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து கிடைக்கிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது, விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு, மின்சார கட்டணம் 3 மடங்காக உயர்வு, மின் கட்டணவரி,சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறுகுறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் எல்லாமே முடங்கிப் போச்சு எனவே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே பெருமாள், ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,காந்தி காமாட்சி,ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் வரதராஜ பெருமாள், தேவேந்திரன், புதூர் கவுன்சிலர் பெருமாள் சாமி,கண்ணன்,வேல்முருகன்,ஆனந்த,மகளிர் அணி பிரியா, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.